துாக்கிட்டு தற்கொலை

கடமலைக்குண்டு,: வருஷநாடு பகுதியைச் சேர்ந்தவர் சுருளி ஆண்டவர் 46, அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் திருப்பூர் சென்று கூலி வேலை செய்தார். முதுகு வலி, கால்களில் நரம்பு சுருட்டு நோய் பாதிப்பால் சுருளி ஆண்டவர் வேலை செய்ய முடியாமல் வீட்டில் இருந்தார். உடல்நல பாதிப்பால் அடிக்கடி மனைவியிடம் புலம்பி உள்ளார். இரு நாட்களுக்கு முன் வருஷநாடு பவளநகர் அருகே உள்ள தனியார் மாந்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி நித்யாதேவி புகாரில் வருஷநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement