பள்ளி சீருடைவிற்பனைக்கு குவிப்பு

ஈரோடு ஈரோடு மாநகரில் அரசுப்பள்ளி சீருடை விற்பனைக்கு குவிந்துள்ளது. பெற்றோர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்ல துவங்கியுள்ளனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும், 2ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும், 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், பள்ளி மாணவ, மாணவியருக்கான சீருடை, ஈரோடு மாநகரில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாங்கி செ


ல்கின்றனர். இதுகுறித்து ஜவுளி கடை விற்பனையாளர் ஜெகதீஸ்வரன் கூறியதாவது:1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அரசு பள்ளியினருக்கான சீருடை வந்துள்ளது. மாணவர்களுக்கு, 290 ரூபாய் முதலும், மாணவிகளுக்கு, 280 ரூபாய் முதலும் சீருடை உள்ளது. டாப்-சுடிதார் செட், 420 ரூபாய் முதல் விற்பனைக்கு உள்ளன. எக்ஸ்எல், டபுள் எக்ஸ்எல், ட்ரிபிள் எக்ஸ்எல் அளவுகளில் சீருடை விற்கப்படுகிறது. பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டுமே சீருடை அரசால் வழங்கப்படுகிறது. அரசிடம் சீருடை கிடைக்காதவர்கள் மட்டுமின்றி அனைவருமே வாங்கி செல்கின்றனர். தற்போது தினமும் நுாற்றுக்கணக்கான பெற்றோர்கள் வாங்கி செல்கின்றனர். மாத இறுதியின் கடைசி நான்கு நாட்களில், அதிக அளவில் சீருடை விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினர்.

Advertisement