மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்தவர் கைது மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்தவர் கைது

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த மல்லப்பாடியை சேர்ந்தவர் முனுசாமி, 80. இவரது மனைவி சரோஜா, 75. வயதான தம்பதிகள் இருவர் மட்டுமே வீட்டில் வசிக்கின்றனர். கடந்த மார்ச், 29, இரவு, சரோஜா வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அவ்வழியாக வந்த மர்மநபர், சரோஜாவின் கழுத்தில் இருந்த, 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றார். இது குறித்து முனுசாமி பர்கூர் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில் மல்லப்பாடி அடுத்த நாடார்கொட்டாயை சேர்ந்த அரவிந்தன், 21 என்பவர், சரோஜா வீட்டருகே அவ்வப்போது வந்து நோட்டமிட்டு யாருமில்லாத நேரத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, 5 பவுன் சங்கிலியுடன், அவரது டூவீலரையும்
பறிமுதல் செய்தனர்.

Advertisement