வல்லம் கிராம குளத்தை சீரமைக்க வேண்டுகோள்

வல்லம்,:வல்லம் கிராமத்தில் உள்ள குளத்தை சீரமைக்க வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தில், குளம் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால், குளத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள வீடுகளில் கழிவுநீரும், குளத்தில் விடப்படுகிறது.
இதனால் குளம் துார்ந்து, தண்ணீர் மாசடைந்து, நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கிறது.
இந்த குளத்தை சீரமைத்து, பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் கரை அமைக்க வேண்டுமென, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களிலும், கிராமத்தினர் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
ஆனால், இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது, கோடைக்காலம் என்பதால், குளத்தில் தண்ணீர் வற்றி வருகிறது.
எனவே, நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குளத்தை சீரமைக்கவும், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.