போதை மாத்திரை பதுக்கிய தம்பதி கைது
கோவை:கோவை அருகே கவுண்டம்பாளையத்தில், விற்பனைக்காக போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அண்ணா நகரில், வீடு ஒன்றில் சோதனை நடத்தினர். அங்கிருந்த சுஜித்குமார், 25, மனைவி வைஷ்ணவி, 25, தம்பதி, போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 135 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மொபைல் செயலி வாயிலாக மாத்திரைகளை வாங்கியுள்ளனர். அதை தர்மபுரியில் பதுக்கி வைத்திருந்து, விற்பனைக்காக கோவை எடுத்து வந்தபோது பிடிபட்டனர்' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement