கோயில்களில் பஞ்சமி பூஜை
தேவகோட்டை : சித்திரை பஞ்சமியை முன்னிட்டு தேவகோட்டை பட்டுக்குருக்கள் நகரில் உள்ள பிருத்தியங்கிரா தேவி கோயில், அத்தி வாராஹி அம்மன் கோயில்களில் சிறப்பு ஹோமம் அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அய்யனார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். பஞ்சமியில் அத்தி வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தன.
தேவகோட்டை சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள வாராஹி அம்மனுக்கு பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் வாராஹி அம்மன் ஸ்தோத்திரங்கள் பாடி வழிபட்டனர். பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு; 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
-
மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை
-
திருநள்ளாறு - பேரளம் அகல பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்
Advertisement
Advertisement