மதுரை பா.ஜ., நிர்வாகி சாவு: போலீசார் விசாரணை
புதுச்சேரி: புதுச்சேரி வந்த மதுரை மாநகர் பா.ஜ., நிர்வாகி காரில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாநகர் பா.ஜ., ஊடக பிரிவு துணைத் தலைவர் முத்துவிக்னேஷ்வரன், 39. இவர், கடந்த 17ம் தேதி ஊடக பிரிவு மாவட்ட நிர்வாகிகள் வேல்பாண்டி, பாலசுப்ரமணி, சீனிவாசன், செந்தில் ஆகியோருடன் சென்னையில் நடக்க இருந்த கட்சி கூட்டத்திற்கு காரில் சென்றனர்.
கூட்டம் வேறு தேதிக்கு மாற்றப்பட்டதால், 5 பேரும் கடந்த 18 ம் தேதி, புதுச்சேரி வந்து, கோலாஸ் நகரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
நேற்று முன்தினம் ஆரோவில் கடற்கரைக்கு சென்றுவிட்டு, இரவு 7:00 மணிக்கு விடுதி வந்தபோது, முத்து விக்னேஸ்வரன் காரிலேயே ஓய்வு எடுத்துவிட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, மற்ற 4 பேரும் அறைக்கு சென்றுவிட்டு, இரவு 9:30 மணிக்கு வந்து பார்த்தபோது, முத்து விக்னேஸ்வரன் காரில் எவ்வித அசைவும் இன்றி காணப்பட்டார்.
அவரை, மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து, அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
வக்ப் நிலமாக இருந்தாலும் அரசு கைப்பற்றலாம்; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
-
கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு தடை போடும் மத்திய அரசு: ராகுல்
-
சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை திடீர் ரத்து
-
கொலை குற்றவாளியல்ல: மோசடி செய்து ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கருக்கு முன்ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன் பசவராஜ் சுட்டுக்கொலை: பலத்த அடி கொடுத்தது பாதுகாப்பு படை!
-
இனியும் தப்பிக்க முடியாது: பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த செய்தி இதுதான்; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேச்சு