புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா; உஷார் நிலையில் சுகாதாரத்துறை
புதுச்சேரி : புதுச்சேரியில், 12 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை உரிய முன்னேற்பாடுகளை செய்து வருவதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு டெங்கு, மலேரியா, உள்ளிட்ட பரிசோதனைகள் செய்வது போன்று கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்த நிலையில், அது தற்போது 12 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதித்த அனைவரும் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை போன்று இங்கு அதிகப்படியான தொற்று இல்லை. அதனால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
தீவிர கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரி அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லுாரி, மகளிர் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் 4 பெட் பிரத்யோகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோரிமேட்டில் உள்ள காசநோய் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் 6 பெட் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை, மத் திய சுகாதாரத்துறையுடன் இணைந்து உற்று கண்காணித்து வருகிறது. தற்போதைக்கு மக்கள் பீதியடையவேண்டாம்' என்றார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க செய்ய வேண்டியவை
இருமல் அல்லது தும்மல் வந்தால் கைக்குட்டையால் மூக்கு மற்றும் வாயை நன்றாக மூடவும்.
சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைர் மூலம் கைகளை அடிக்கடி கழுவவும்.
நெரிசலானை இடங்களை தவிர்க்கவும்.
காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் பொது இடங்களை விட்டு விலகி, காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களுடனான தொடர்பை தவிர்க்க வேண்டும்.
செய்யக்கூடாதவை
தொற்றால் பாதித்தவர் பயன்படுத்திய கைக்குட்டை உள்ளிட்ட துணிகளை பயன்படுத்தக்கூடாது.
தொற்றால் பாதித்தவர் அருகில் நெருங்கக்கூடாது.
கண், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடக்கூடாது.
பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது.
டாக்டரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்து எடுக்க வேண்டாம்.
மேலும்
-
கர்நாடகாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு; 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
-
மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை
-
திருநள்ளாறு - பேரளம் அகல பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்