தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை : விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் நேற்று தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆதரவு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச., கருணாநிதி, சி.ஐ.டி.யு., லெனின், எச்.எம்.எஸ்., பாதர் வெள்ளை, ஐ.என்.டி.யு., ராஜசேகரன், ஏ.ஐ.டி.யு.சி., சேது, எம்.எல்.எப்., முத்துக்கிருஷ்ணன், மகபூப்ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் என்பதை உறுதி செய்ய வேண்டும் உட்பட பலஅம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement