கார்- பஸ் மோதிய விபத்து; கர்நாடகாவில் ஒரே குடும்பத்தினர் உட்பட 6 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் ஸ்கார்பியோ- பஸ்சில் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் விஜயபுராவில் கட்டுப்பாட்டை இழந்த மகேந்திரா ஸ்கார்பியோ வாகனம் சாலை தடுப்பு மற்றும் பஸ்சில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் பஸ் டிரைவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மனகுலி கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, மேலும் இறந்தவர்களின் அடையாளங்கள் காணும் பணி நடந்து வருகிறது. இது குறித்து மீட்பு படை அதிகாரி கூறியதாவது:
துரதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேருடன் சென்று கொண்டிருந்த ஸ்கார்பியோ கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
வக்ப் நிலமாக இருந்தாலும் அரசு கைப்பற்றலாம்; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
-
கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு தடை போடும் மத்திய அரசு: ராகுல்
-
சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை திடீர் ரத்து
-
கொலை குற்றவாளியல்ல: மோசடி செய்து ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கருக்கு முன்ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன் பசவராஜ் சுட்டுக்கொலை: பலத்த அடி கொடுத்தது பாதுகாப்பு படை!
-
இனியும் தப்பிக்க முடியாது: பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த செய்தி இதுதான்; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேச்சு