ஆர்ப்பாட்டம்...

விருதுநகர்; விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு தொழிலாளர் திருத்த சட்டங்களை கைவிட வேண்டும் உட்பட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொ.மு.ச., மாவட்டச் செயலாளர் மாடசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் சி.ஐ.டி.யு., மாநிலச் செயலாளர் மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் தேவா, ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி சமுத்திரம், எம்.எல்.எப்., காதர் மைதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement