பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பாராட்டு

சிவகாசி; சிவகாசி பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக் கல்லுாரியில் இந்த கல்வியாண்டில் பயின்ற 178 மாணவர்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். இந்நிலையில் லுாகாஸ் டி.வி.எஸ்., நிறுவனத்தில் பணி நியமனம் பெற்ற 40 மாணவர்களை நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு இயக்குனர் வேல்முருகன் தலைமையில் கல்லுாரியில் இருந்து சென்னைக்கு பஸ் வசதி செய்யப்பட்டு அழைத்துச் சென்றனர். பணி நியமன ஆணைகளை பெற்ற மாணவர்களை பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி, முதல்வர் ஸ்ரீதர், பேராசிரியர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

கல்லுாரி தாளாளர் கூறுகையில் பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக் கல்லுாரியில் கட்டமைப்பு வசதிகள், ஆய்வுக்கூடங்கள் அனுபவம் மிக்க பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தனித் திறமைகளை வளர்ப்பதற்கு தேவையான ஆங்கில புலமை மேலாண்மை திறன் போன்ற பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால் மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர், என்றார்.

Advertisement