மா ஏற்றுமதி செய்திட முன் வர வேண்டும் : கலெக்டர் பேச்சு கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
போடி : 'மா ஏற்றுமதி செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும்,' என கருத்தரங்கில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசினார்.-
தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் மாவட்ட அளவிலான மா சாகுபடி கருத்தரங்கம் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடந்தது. தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா, வேளாண் துணை இயக்குநர் வளர்மதி, நறுமண பயிர்கள் வாரிய உதவி இயக்குநர் செந்தில் குமரன், தோட்டக்கலை உதவி இயக்குநர் பாண்டியராஜன், ஏல விவசாயிகள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் ஞானவேல், கல்லூரி செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். போடி தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜ முருகன் வரவேற்றார். பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசுகையில் : மற்ற விவசாயிகள் கருத்தரங்கு கூட்டத்தை காட்டிலும் மா கருத்தரங்கில் பெண் விவசாயிகள் அதிக அளவில் வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மா வகைகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதோடு, வெளிநாடுகளுக்கு மா ஏற்றுமதி செய்திட விவசாயிகள் முன் வர வேண்டும். விவசாயிகள் குறைகள் போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி
-
கார்- பஸ் மோதிய விபத்து; கர்நாடகாவில் ஒரே குடும்பத்தினர் உட்பட 6 பேர் பலி
-
கர்நாடகாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு; 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்