குறைதீர் முகாமில் 21 மனுக்களுக்கு தீர்வு

அண்ணா நகர், அண்ணா நகர் காவல் மாவட்டம் சார்பில், பொதுமக்கள் புகார் மனு குறைதீர் முகாம், அண்ணா நகர் காவல் நிலையத்தில் நேற்று நடந்தது.

மேற்கு மண்டல இணை கமிஷனர் பகெர்லா செபாஸ் கல்யாண், பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கி விசாரித்தார்.

அண்ணா நகர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 21 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களுக்கும், உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Advertisement