சாலை வளைவில் பள்ளம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம், மே 22-
காஞ்சிபுரம் மாநகராட்சி, டெம்பிள் சிட்டியில் இருந்து, தும்பவனம் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் வளைவு ஒன்று உள்ளது.
வளைவு பகுதியை ஒட்டி பள்ளம் உள்ளது. இரவு நேரத்தில், போதுமான வெளிச்சம் இல்லாத இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை வளைவில் திரும்பும்போது, நிலைதடுமாறி பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், பள்ளம் உள்ள பகுதியில் சாலையோர தடுப்பு அமைக்கவும், இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!
-
அரபிக் கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்
-
காசா மீது கொஞ்சம் கருணை காட்டுங்க; இஸ்ரேலிடம் வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்
-
ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு
Advertisement
Advertisement