விருப்ப ஓய்வு கிடைக்காததால் அஞ்சல ஊழியர் தற்கொலை
ஓட்டேரி, ஓட்டேரி நார்த் டவுன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தஸ்தகீர், 55. பாரிமுனையில் உள்ள தபால் அலுவலகத்தில், அக்கவுண்டட்டாக வேலை பார்த்து வந்தார்.
திருமணமாகி ஒரு மகள் உள்ளார். எட்டு ஆண்டுகளாக வாடகை வீட்டில் தங்கியுள்ளார்.
அஞ்சல் துறையில் புதிதாக புகுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்த பணி தெரியாததால், விருப்ப ஓய்வு கேட்டுள்ளார்.
இதற்காக விண்ணப்பித்தவர், விடுமுறை எடுத்து ஒரு மாதமாக வீட்டிலேயே தங்கியிருந்தார். ஆனால், எதிர்பார்த்தபடி விருப்ப ஓய்வு கிடைக்கவில்லை.
வரும் 26ம் தேதி மீண்டும் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்டது.
நேற்று காலை, மனைவி வேலைக்கு சென்றுவிட்டார். மகளும், அம்மாவும் வீட்டில் இருந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடிக்கு சென்ற தஸ்தகீர், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
***
மேலும்
-
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!
-
அரபிக் கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்
-
காசா மீது கொஞ்சம் கருணை காட்டுங்க; இஸ்ரேலிடம் வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்
-
ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு