கரூரில் சுற்றித்திரிந்த மூதாட்டியை சொந்த ஊருக்கு அனுப்பிய போலீசார்

கரூர், பாதிக்கப்பட்டு, சுற்றித்திரிந்த மூதாட்டியை மகளிர் போலீசார் மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் மனம் நலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சிலர் சுற்றி வருகின்றனர். அவர்களை, திருச்சி மாவட்ட போலீசார் பாணியில் மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், நேற்று கரூர் மனோகரா கார்னர் பகுதியில், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த, 55 வயது மூதாட்டியை, கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி உள்ளிட்ட போலீசார் விசாரித்தனர். அப்போது, அந்த மூதாட்டி திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே பெரிய புதுார் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது மனைவி காளியம்மாள் என தெரிய வந்தது. இதையடுத்து, காளியம்மாளுக்கு உணவு வாங்கி கொடுத்த மகளிர் போலீசார், கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து தனியார் பஸ் மூலம், சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement