அரசு உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கரூர், கரூர் மாநகராட்சி, கோட்டை மேடு உயர்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கரூர் மாநகராட்சி, கோட்டை மேடு உயர்நிலைப்பள்ளி கடந்த, 1987ல் நடுநிலைப் பள்ளியாக இருந்த போது, எட்டாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள், 12 பேர், மாணவியர், 13 பேர் என, 25 பேர் பங்கேற்று, பழைய நினைவுகளை பரிமாறி கொண்டனர்.

பிறகு, குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் இணைந்து புதிய சேர் ஒன்றை, தற்போதைய பள்ளி தலைமையாசிரியர் சந்திர சேகருக்கு வழங்கினர். ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர் செல்லாண்டிப்பாளையத்தை சேர்ந்த ஆனந்த் செய்திருந்தார்.

Advertisement