பூட்டி கிடக்கும் காமராஜர் பூங்கா பயன்பாட்டிற்கு வருவது எப்போது

காரைக்கால்: காரைக்கால் அம்பாள் சமுத்திரத்தில் உள்ள சிறுவர் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்கால் அடுத்த அம்பாள் சமுத்திரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காமராஜர் சிறுவர் பூங்கா உள்ளது. பூங்கா போதிய பராமரிப்பின்றி, புதர் மண்டி விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் முறையிட்டதன் பேரில், நாஜிம் எம்.எல்.ஏ.,வின் தொடர் முயற்சியால், பூங்கா சீரமைக்கப்பட்டது.
மேலும் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்திட ஊஞ்சல், சறுக்குமரம், நீர் வீழ்ச்சிகளுடன் புனரமைக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல், பூட்டி வைத்துள்ளனர். இதனால், பூங்கா இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மக்கள் வரிப்பணத்தில் சீரமைக்கப்பட்ட பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை
-
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் கமிஷனர்: உள்துறை செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு
-
முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்