ஹைடெக் நகரில் காத்திருக்கும் அடுக்குமாடி வீடு! இடைத்தரகரிடம் பணத்தை இழக்கும் மக்கள்

திருப்பூர்; பல்லடத்தில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கான பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. 'இடைத்தரகர் களிடம் பணத்தை இழக்காமல், பயனாளிகள் நேரில் விண்ணப்பிக்கலாம்' என, வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீரபாண்டி, நெருப்பெரிச்சல், பாரதிநகர், திருக்குமரன்நகர், பூண்டி, அவிநாசி உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
தற்போது, பல்லடம், கக்கம்பாளையம் கிராமம், ஹைடெக் பார்க் நகரில், 45.75 கோடி ரூபாய் மதிப்பில், 173 ஏக்கர் பரப்பளவில், 8 தளங்களில், 432 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது; இங்கு, 'லிப்ட்' வசதியும் உண்டு. இங்கு குடியிருப்பு பெற, பங்களிப்பு தொகையாக, 3.09 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.பெருந்தொழுவில், 20.55 கோடி ரூபாய் செலவில், 4 தளங்களில், 192 வீடு களுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இங்கு குடியிருப்பு பெற பங்களிப்பு தொகையாக, 2.20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
டயல் செய்யுங்க... விபரம் தெரியும்!
வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க, அந்தந்த பகுதியில் வசிக்கும் தகுதியுள்ளவர்கள், குடியிருப்பு அமைந்துள்ள இடத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்திலேயே நேரடியாக விண்ணப்பிக்கலாம். பல்லடம் ைஹடெக் பார்க் நகரில், சாலையோரம் குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது; அங்கு, 300 வீடுகள் காலியாக உள்ளன. வாரியம் மற்றும் மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று, முழு பங்களிப்பு தொகை செலுத்தும் பயனாளிகளுக்கே குடியிருப்புகள் ஒதுக்கப் படுகின்றன.
எனவே, வீடு வாங்கி தருவதாக கூறி பணம் கேட்கும், இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து மக்கள் ஏமாற வேண்டாம். இந்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தியும், பொதுமக்கள் பலர், வெளிநபர்களிடம் பெரும் தொகையை கூடுதலாக கொடுத்து ஏமாந்து விடுகின்றனர்.
அரசு நிர்ணயித்த தொகையை மட்டும் செலுத்தி, எவ்வித சிபாரிசுமின்றி தகுதியான பயனாளிகளுக்கு அதிகாரிகளே குடியிருப்பை ஒதுக்கும் போது, வெளிநபர் களிடம் பணத்தை இழக்க வேண்டாம். மேலும் விவரம் தேவைப்படுவோர், 96267 - 27628 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றனர்.
மேலும்
-
உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பெருமிதம்!
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை
-
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் கமிஷனர்: உள்துறை செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு