எஸ்.சி.வி., சென்ட்ரல் பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்

திருப்பூர்; திருப்பூர், கணியாம்பூண்டி தி எஸ்.சி.வி., சென்ட்ரல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவியர், நடந்து முடிந்த, பிளஸ் 2 பொது தேர்வில், முதல் ஆண்டிலேயே, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் ரிஷி கிருஷ்ணா, பிரணவ், ஸ்ரீ சக்தி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். மாணவர்கள் விஷ்ணு பிரபு மற்றும் பிரணவ் ஆகியோர் 'இன்பார்மேட்டிக்ஸ் பிராக்டிசஸ்' பாடத்திலும், மாணவர் அகிலேஷ், அக்கவுன்டன்சி பாடத்திலும் சிறப்பிடம் பெற்றனர். தேர்வெழுதிய மாணவர்கள், 10ம் வகுப்பு வரை, மெட்ரிக்., பாடப்பிரிவில் கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், 10ம் வகுப்பு பொது தேர்வில், மாணவர் லிகித் கண்ணன், 91.4 சதவீதம் மதிப்பெண், பவேஷ், 90.6 சதவீதம், மாணவி சாத்விகா, 86.6 சதவீதம் மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். லிகித் கண்ணன், தமிழ், ஆங்கிலம் மற்றும் அறிவியல், பவேஷ், தமிழ், ஆங்கிலம், அபி நிவேஷ், ஸ்ரீ விஷ்ணு, சஸ்வந்த், ராம் ரிசால், ஹரிஹரசுதன் ஆகியோர் தமிழ், சாத்விகா, தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களிலும் சிறப்பிடம் பெற்றனர்.
சாதித்த மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் முருகசாமி, பள்ளி நிறுவனர் தர்மமூர்த்தி, முதல்வர் தாரணி, ஒருங்கிணைப்பாளர் தீபா சுப்ரமணி, ஸ்ரீ கரியகாளியம்மன் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் தனலட்சுமி உள்ளிட்டோர் பாராட்டினர். 'எல்.கே.ஜி., முதல், 9ம் வகுப்பு வரையும், 11ம் வகுப்புக்கும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது,' என பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.
மேலும்
-
உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பெருமிதம்!
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை
-
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் கமிஷனர்: உள்துறை செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு