அயர்லாந்து அணி அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் அணி ஏமாற்றம்

டப்ளின்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய அயர்லாந்து அணி 124 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டப்ளினில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
அயர்லாந்து அணிக்கு ஆன்டி பால்பிர்னி, கேப்டன் பால் ஸ்டிர்லிங் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஸ்டிர்லிங் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்த போது ஸ்டிர்லிங் (54) அவுட்டானார். பால்பிர்னி (112) சதம் விளாசினார். ஹாரி டெக்டர் (56), அரைசதம் கடந்தார். லார்கன் டக்கர் (30) ஓரளவு கைகொடுத்தார். அயர்லாந்து அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 303 ரன் எடுத்தது.
கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (19), எவின் லீவிஸ் (2), கீசி கார்டி (6), கேப்டன் ஷாய் ஹோப் (2), அமிர் ஜாங்கோ (0) ஏமாற்றினர். ராஸ்டன் சேஸ் (55), மாத்யூ போர்டு (38), ஜஸ்டின் கிரீவ்ஸ் (35) ஓரளவு கைகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 34.1 ஓவரில் 179 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. அயர்லாந்து சார்பில் மெக்கார்த்தி 4, டாக்ரெல் 3 விக்கெட் சாய்த்தனர்.
இமாலய வெற்றிஒருநாள் போட்டி அரங்கில் அயர்லாந்து அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன் வித்தியாசத்தில் (124) இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன், 3 முறை, வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த இலக்கை 'சேஸ்' செய்து வென்றிருந்தது.
* வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 4வது வெற்றியை பெற்றது அயர்லாந்து. இவ்விரு அணிகள் 16 முறை மோதின. இதில் அயர்லாந்து 4, வெஸ்ட் இண்டீஸ் 11ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
மேலும்
-
ரூ.24,470 கோடியில் புதுப்பொலிவு பெற்ற 103 ரயில் நிலையங்கள்: பிரதமர் திறப்பு
-
விளக்கு தவறி விழுந்ததில் மின் சாதன பொருட்கள் எரிந்து நாசம்
-
ரூ.1.44 லட்சம் மோசடி ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
-
சரியான தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்: அமைச்சர் பாராட்டு
-
தீய சக்திகளை அழிக்க போர் வேண்டும் ஸ்ரீசங்கர பாரதி சுவாமிகள் பேச்சு
-
கொல்லிமலை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; பாதுகாப்புடன் குளிக்க அறிவுரை