பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி வெற்றி

ஆமதாபாத்: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை லக்னோ அணி வென்றது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய 64-வது லீக் போட்டி குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடைபெற்றது. இதில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியில் துவக்க வீரர்களாக அயிதம் மார்க்ரம் , மிட்சல் மார்ஷ் களமிறங்கினர். மார்க்ரம் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து சாய் கிஷோர் பந்தில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
பிறகு , மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஷ் பூரன் சேர்ந்து அதிரடி காட்ட துவங்கினர். அதிரடியாக ஆடிய மிட்சல் மார்ஷ் சதமடித்தார். 64 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து அர்ஷத் கான் பந்தில் ரூதர் போர்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து . நிக்கோலஸ் பூரன் அரைசதம் அடித்தார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. பூரன் 56, ரிஷப் பன்ட் 16 ரன்களுடன் ஆட்மிழக்காமல் இருந்தனர்.
236 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய குஜராத் அணியில் சாய் சுதர்சன் 21 ரன்களில் அவுட்டாகி முதல் விக்கெட்டாக வெளியேறினார். சுப்மன்கில் 35 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக ஆடி ரூதர்போர்ட் 38 ரன்களிலும் திவால்டியா 2 ரன்களிலும் அவுட்டாகினர். 23 பந்துகளில் அரை சதம் கடந்த ஷாரூக்கான் 57 ரன்களில் அவுட்டானார். . அர்ஷாத் கான் ஒரு ரன்னில் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது குஜராத் அணி. இதையடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்றது.
மேலும்
-
ரூ.3,400 கோடி!: மைசூரு மன்னர் குடும்பத்துக்கு கர்நாடக அரசு வழங்க உத்தரவு
-
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்
-
சீனாவின் குய்சோ மாகாணத்தின் நிலச்சரிவில் 10 பேர் பலி
-
பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு கர்நாடக ஐகோர்ட் இடைக்கால தடை
-
தாயை போல தடகளத்தில் சாதிக்க துடிக்கும் மகள்
-
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் 14 வயது சிறுவன்