குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை கொன்ற தாய்
அரியலுார்:குறை பிரசவத்தில் பிறந்த சிசுவை, தாயே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலுார் மாவட்டம், கண்டராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ், 49. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், ஒருவாரமாக, அரியலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
நேற்று முன்தினம், வேதியராஜை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற அவரது மனைவி, மகள் லாரா, 20, ஆகியோர் அன்றிரவு மருத்துவமனையிலேயே தங்கியுள்ளனர்.
நேற்று அதிகாலையில் கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற லாரா, நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.
மருத்துவமனையில் துாய்மை பணியாளர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய சென்றபோது, அங்கு லாரா ஆடையில் ரத்த கரையுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், திருமணமாகாத லாரா, எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கழிப்பறைக்கு சென்றபோது, குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
பெற்றோருக்கு தெரிந்தால் பிரச்னையாகி விடும் எனக்கருதி, அங்குள்ள கழிப்பறை பேஷனில், பிறந்த குழந்தையை அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
குழந்தையின் உடலை மீட்ட போலீசார், அப்பெண்ணிடம் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!
-
அரபிக் கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்
-
காசா மீது கொஞ்சம் கருணை காட்டுங்க; இஸ்ரேலிடம் வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்
-
ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் அரசு; பதவியை ராஜினாமா செய்ய யூனுஸ் முடிவு