பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு கர்நாடக ஐகோர்ட் இடைக்கால தடை

பெங்களூரு: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா மீது தொடரப்பட்ட அனைத்து வித விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்த திருவிழாவில் பங்கேற்ற பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா, ஆட்சேபனைக்கு உரிய வகையில் பேசினார்.
இதை கண்டித்து, உப்பினங்கடி போலீசில், மே 3ல் இப்ராஹிம் புகார் அளித்திருந்தார்.தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மே 4ல் மனு தாக்கல் செய்திருந்தார்.
புகார் அளித்த இப்ராஹிம் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'நம் நாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. மற்ற நாடுகள் போன்று மத அடிப்படையில் கொண்ட நாடு அல்ல. எனவே, எம்.எல்.ஏ.,வின் செயலுக்கு சட்டப்படி தண்டனை அளிக்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில், பல ஆதாரங்கள் கிடைத்து உள்ளன' என்றார்.
எம்.எல்.ஏ., தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'மனுதாரர் பேச்சுக்கு பின், எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் இல்லை' என்றார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ராச்சையா கூறுகையில், ''மனுதாரருக்கு எதிராக பதியப்பட்ட மூன்று வழக்குகள் மீதும் அடுத்த உத்தரவு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கு விசாரணை, ஜூன் 18ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது,'' என்றார்.
மேலும்
-
அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள்; சீமான் கிண்டல்
-
ஆன்லைன் சூதாட்ட விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
-
உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பெருமிதம்!
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை