சீனாவின் குய்சோ மாகாணத்தின் நிலச்சரிவில் 10 பேர் பலி
பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவின் குய்சோ மாகாணத்தின் சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் நேற்று அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன; ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன.
இந்த நிலச்சரிவில், 10 பேர் பலியாகினர்.
இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மீட்புப் பணி முழு வீச்சில் நடக்கிறது. மோப்ப நாய்கள் உதவியுடன், நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி நடக்கிறது.
செங்குத்தான மற்றும் மலைபாங்கான நிலப்பரப்பு என்பதால், குவோவாவில் மீட்புப் பணிகள் சிக்கலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தையடுத்து, அங்கு தேசிய அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் முடிவடைந்தால் தான், பலியானோரின் உண்மையான எண்ணிக்கை தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை
-
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் கமிஷனர்: உள்துறை செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு
-
முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்
Advertisement
Advertisement