அவிநாசி அருகே உருவாகும் அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்க அன்னுார்வாசிகள் ஆர்வம்

அவிநாசி : திருப்பூர் - மாவட்டம், அவிநாசி - பொங்கலுாரில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க, கோவை மாவட்டம், அன்னுார் சுற்றுவட்டார மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி அவிநாசி ஒன்றியம், பொங்கலுார் ஊராட்சி பகுதியில், 15 ஏக்கர் பரப்பளவில், 888 வீடுகளை உள்ளடக்கிய, 4 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.அதிகாரிகள் கூறியதாவது:பொங்கலுாரில், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றும் வகையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி நடந்து வருகிறது. வரும், டிச., மாதம் இப்பணி முடிந்து, பயனாளிகளுக்கு வீடு வழங்கும் பணி துவங்கும் என, எதிர்பார்க்கிறோம்.
அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியாக இருப்பினும், அன்னுார் - புளியம்பட்டி சாலையோரம், கோவை மாவட்ட எல்லையில் இக்குடியிருப்பு அமைந்துள்ளதால், கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட அன்னுார் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் வீடு வேண்டி விண்ணப்பிக்கின்றனர்.
பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக, 2.32 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதுவரை, 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன; அதில், 150 விண்ணப்பங்கள் அன்னுார் சுற்றுவட்டார மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன; இதுவரை, 40 பேர் பங்களிப்பு தொகை செலுத்தியுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
ரூ.3,400 கோடி!: மைசூரு மன்னர் குடும்பத்துக்கு கர்நாடக அரசு வழங்க உத்தரவு
-
சீனாவின் குய்சோ மாகாணத்தின் நிலச்சரிவில் 10 பேர் பலி
-
பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு கர்நாடக ஐகோர்ட் இடைக்கால தடை
-
தாயை போல தடகளத்தில் சாதிக்க துடிக்கும் மகள்
-
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் 14 வயது சிறுவன்
-
'ஸ் கேட்டிங் கிங்' தனு ஷ் பாபு