சரியான தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்: அமைச்சர் பாராட்டு

பவானி பவானி அருகே காளிங்கராயன் வாய்க்கால், வலது கரையில் உள்ள பேபி வாய்க்கால் துார்வாரும் துவக்க நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

மண், புதர், கழிவு சாக்கடை மூடியதால், 20 கி.மீ., துார காளிங்கராயன் வாய்க்காலை, 28.25 லட்சம் ரூபாயில் துார்வார நிதி பெறப்பட்டது. இப்பணியை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது:

உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. சரியான உத்தரவை உச்ச நீதி மன்றம் அளித்துள்ளது. தமிழக முதல்வர் எடுத்துக்கொண்ட முன்னெடுப்புக்கு நியாயம் இருப்பதை இந்த உத்தரவு காட்டுகிறது. அரசியலமைப்பு சட்டம் தான் எல்லாவற்றுக்கும் உயர்வானது என்பதை இந்த தீர்ப்பு காட்டியுள்ளது. எந்த தவறும் இல்லாமல் அனைத்து துறைகளையும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணமாக இருக்கிறது.
ஒவ்வொரு ஆய்விலும் முதல்வர் இதைத்தான் வலியுறுத்தி வருகிறார். டாஸ்மாக் அதிகாரிகளை அமலாக்கத்துறையினர் நடத்திய விதம் வருத்தத்துக்குரியது. எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகின்றனர் இது தவறான அணுகு முறை, இது தவறான குற்றச்சாட்டு. இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்வில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement