விளக்கு தவறி விழுந்ததில் மின் சாதன பொருட்கள் எரிந்து நாசம்
ப.வேலுார், ப.வேலுாரில், சுவாமி மாடத்தில் ஏற்றி வைத்திருந்த விளக்கு தவறி விழுந்ததில், வீடு தீ பிடித்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
ப.வேலுார் அருகே, காவேரி சாலையில் உள்ள மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 75, அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி, 65. நேற்று வழக்கம்போல் வீட்டில் சுவாமி படங்களின் முன், விளக்கு ஏற்றி விட்டு கிருஷ்ணமூர்த்தி அரிசி கடைக்கு சென்று விட்டார். இவரது மனைவி தனலட்சுமி சமையல் அறையில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கு தவறி விழுந்து தீ பிடித்துள்ளது.
நேற்று காலை, 11:00 மணிக்கு ஹாலில் இருந்து கரும்புகை வந்துள்ளது. சமையலறையில் இருந்து வெளியே வந்த தனலட்சுமி, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் கட்டில், ப்ரிட்ஜ், 'டிவி' மற்றும்
பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாயின.