கஞ்சா விற்ற இளைஞர்கள் மூவர் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வேடல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக, பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர்களிடம் நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, செட்டியார்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன், 28, பெரியகாரை கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 25, கூத்திரம்பாக்கம் கிராமத்தை்ச் சேர்ந்த ஆடலரசு, 23, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, டூ - வீலர் ஒன்று, 2 கிலோ கஞ்சா் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement