கோவை, நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு


கோவை: ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


வரும் 25, 26 தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.


இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுடன் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு 3 மாநில பேரிடர் மீட்புப் படை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


ஊட்டி, வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளர்.
தீயணைப்பு துறை, மின்சாரம்,நெடுஞ்சாலைத்துறை என அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement