சாலையோர கிணறுகளுக்கு தடுப்புச்சுவர்கள் அமைப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், புலிபாக்கத்தில் இருந்து, சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர், தினமும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையோரத்தில், மூன்று இடங்களில் தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி கிணறுகள் உள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், நிலைத்தடுமாறி கிணற்றில் விழும் சூழல் இருந்தது.
மேலும், இச்சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இந்த சாலையை சீரமைத்து, கிணறு உள்ள இடங்களில் தடுப்புச்சுவர்கள் அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், நபார்டு திட்டத்தின் கீழ், 1.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, சாலை புதுப்பிக்கப்பட்டு, சாலையோரத்தில் கிணறு அமைந்துள்ள மூன்று இடங்களில் தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.