திண்டுக்கல் சுய உதவிக்குழுவில் 1.62 லட்சம் உறுப்பினர்கள்

திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 14,224 (ஊரகம், நகர்ப்புறம்) சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டு 1,62,577 உறுப்பினர்கள் உள்ளதாக,'' தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஷ்பாபு தெரிவித்தார்.
மகளிர் குழு நோக்கம் ...
கிராம பெண்களில் 18 வயது முதல் 60 வயதிற்குட்பட்ட உறுப்பினர்களை கொண்டு குழு உருவாக்கப்படுகிறது. இக்குழுவானது சமுதாய வளபயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு சுழல் நிதி ரூபாய் ரூ. 15 ஆயிரம் பயிற்சி பெற்ற குழுக்களுக்கு உள்கடன் பெறுவதற்கு ஏதுவாக வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 14,224 (ஊரகம் , நகர்ப்புறம்) குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1,62,577 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். குழு உருவாக்கம் செய்யப்பட்ட பிறகு சேமிப்பு, நிதிச்சார் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வங்கிக்கடன் இணைப்பு பெற்றுதரப்படுகிறது.
பொருளாதார மேம்பாட்டிற்கு செயல்படுத்தும் திட்டங்கள் உள்ளதா...
ஊரக பண்ணை, பண்ணை சாரா செயல்பாடுகள் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுகிறது.
நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், நத்தம் உள்ளிட்ட வட்டாரங்களில் கோழி வளர்ப்பு மூலம் 40 பேரும், ஆடு வளர்ப்பு தொகுப்பின் மூலம் 40 பேரும் பயன்பெற்றுள்ளனர். தென்னை நாற்றங்கால் உற்பத்தி, தேனி வளர்ப்பு, காளான் தொகுப்பு என பண்ணை செயல்பாடுகளில் தொழில்முனைவோர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
காப்பீட்டுத்திட்டங்கள் உள்ளனவா
பிரதம மந்திரி பாதுகாப்பு,விபத்து (பி.எம்.எஸ்.பி.ஒய்.,), பிரதம மந்திரி ஆயுள் (பி.எம்.ஜே.ஜே.பி.ஐ.,) ஆகிய காப்பீட்டுத்திட்டங்கள் உள்ளன. இதில் பி.எம்.எஸ்.பி.ஒய்., திட்டத்தின்படி சேர்ந்துள்ள குழு உறுப்பினர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் திட்ட காப்பீட்டிற்குரிய கட்டணமாக ரூ.20 பெறப்பட்டு விபத்து காப்பீடு செய்து தரப்படுகிறது. அதேபோல் ரூ.436 கட்டணம் பெறப்பட்டு ஆயுள் காப்பீடு செய்யப்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திட்டங்களில் இணைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.
சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படுகிறதா
ஊரகப் பகுதிகளில் நலிவுற்றோர், பின்தங்கிய மக்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி அனைத்து ஊராட்சிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் முதல் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது. இது சிறிய கடைகள், ஆடு,மாடு வளர்ப்பு செய்வோருக்கு உடனடி கடன் வழங்க ஏதுவாக இருக்கிறது.
பாலின வள மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதா
குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் தெரிவிக்க பாலினவள மையம் முதற்கட்டமாக ரெட்டியார்சத்திரம், குஜிலியம்பாறை, வடமதுரை, நிலக்கோட்டை வட்டாரங்களில் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. நடப்பாண்டில் 2ம் கட்டமாக மீதமுள்ள 10 வட்டாரங்களிலும் பாலின வள மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
காலை உணவுத்திட்டம், மக்களை தேடி மருத்துவத்தில் சுய உதவிக்குழுவினர் உள்ளனரா
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக, நகரபுறப்பகுதிகளிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் 1266 பள்ளிகளில் செயல்படுகிறது. இதில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் 57,917 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதற்கான சமையல் பணிகளை சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 311 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக பணிபுரிகின்றனர் என்றார்.
மேலும்
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை
-
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் கமிஷனர்: உள்துறை செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு
-
முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்
-
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை