கிரிக்கெட் லீக்: சாமுராய் வெற்றி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் சாமுராய் அணி வெற்றி பெற்றது.
பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன், கே.கே.ஆர்., நடராஜன் பார்வதி அம்மாள் கோப்பைக்கான 3 வது டிவிஷன் போட்டிகள் ஆர்.வி.எஸ்., ரிச்மேன் மைதானங்களில் நடந்தது.
திண்டுக்கல் சாமியார் தோட்டம் சிசி அணி 24.4 ஓவர்களில் 132 க்கு ஆல்அவுட் ஆனது. எட்வின்அரசன் 45, சதீஸ்குமார் 44, மகேஷ்பூபதி 4, ஹரிஹரன் 3 விக்கெட். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் சாமுராய் சிசி அணி 21.4 ஓவர்களில் 135/4 எடுத்து வென்றது. அசைன் 69(நாட்அவுட்). பழநி யுவராஜ் சிசி அணி 25 ஓவர்களில் 215/8. கவியரசு 78, பிரபு 56(நாட்அவுட்), முரளி 5 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் வெற்றி சிசி 24.4 ஓவர்களில் 111 ஆல்அவுட் ஆகி தோற்றது. அரோமின்ராஜ் 31, செந்தில்வேலவன் 3 விக்கெட். திண்டுக்கல் சாம்பியன்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 133/8. வெற்றிவேல் 51, அதுல்குமார் 28, சிலம்பரசன் 3 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் சீனிபாலா சிசி அணி 20.1 ஓவர்களில் 138/5 எடுத்து வென்றது. நாகமணிகண்டன் 32, அருண்சிவகுமரன் 29. எரியோடு ஸ்கில் சிசி 22 ஓவர்களில் 157/8. பிரவீன்குமார் 59, இளங்கோ 6 விக்கெட். சேசிங் செய்த நல்லாம்பட்டி யங்ஸ்டர்ஸ் சிசி 22 ஓவர்களில் 119/9 எடுத்து தோற்றது. முத்து 44, ஜோதீஸ்வரன் 3 விக்கெட். எரியோடு யங்ஸ்டர்ஸ் சிசி முதலில் பேட்டிங் செய்து 17.5 ஓவர்களில் 45 க்கு ஆல்அவுட் ஆனது. பூபதிராஜா, அஜித்குமார் தலா 4 விக்கெட். சேசிங் செய்த மன்சூர் சிசி 2.5 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து வென்றது.
மேலும்
-
உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பெருமிதம்!
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை
-
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் கமிஷனர்: உள்துறை செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு