மனைவி, மாமியாரை தாக்கிய கணவர் மீது வழக்கு

தேனி: கடமலைக்குண்டு மூலக்கடை ஆலந்தளிர் செந்தாமரைக்கண்ணன் 43. ஆக்டிங் டிரைவர். இவரது மனைவி திருமேனி 35. இருவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர் மது குடித்திவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் மனைவி கோபித்துக் கொண்டு, 7 ஆண்டுகளுக்கு முன்,தனது தாய் பவுன்தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து தங்கினார். தேனியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த கணவர் தகராறில் ஈடுபட்டார். இதனால் மே 20ல் கணவர் வேண்டாம் என திருமேனி, முடிவு செய்து, ஆலந்தளிருக்கு சென்று வீட்டில் உள்ள தனது பொருட்களை எடுத்துக் கொண்டு தேனி வந்துவிட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தேனி வந்து மனைவி திருமேனியை தாக்கினார். மனைவி திருமேனி புகாரில் கணவர் செந்தாமரைக்கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement