ஜமாபந்தியில் பட்டா மாறுதல் கோரி அதிக மனுக்கள்
தேனி: தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நேற்று துவங்கியது. இதில் பொதுமக்கள் பலர் பட்டா மாறுதல், வீட்டு மனை பட்டா கோரி அதிகம் விண்ணப்பித்தனர்.
பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். உத்தமபாளையத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, தேனி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி , தாசில்தார் சதீஸ்குமார் முன்னிலைவகித்தார்.
போடியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமது, ஆண்டிபட்டியில் பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் ஆகியோர் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில்பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைபட்டா, வேளாண், மின் வாரியம், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
தேனியில் 210, பெரியகுளத்தில் 172, போடியில் 76, உத்தமபாளையத்தில் 56, ஆண்டிபட்டியில் 85 என மொத்தம் 599 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
மேலும்
-
உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பெருமிதம்!
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை
-
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் கமிஷனர்: உள்துறை செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு