பா.ஜ., செயலர் போக்சோவில் கைது

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பா.ஜ., கிழக்கு ஒன்றிய செயலர் ராஜ்குமார் வீட்டின் அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் உறவினர்கள் ராஜ்குமாரை தாக்கி, அதை படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர்.

சிறுமியின் புகாரையடுத்து, மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார், ராஜ்குமாரை கைது செய்தனர். ராஜ்குமாருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். அவர் வேனில் பள்ளி மாணவ - மாணவியரை அழைத்து செல்லும் பணி செய்து வந்தார்.

Advertisement