பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்., பொருளாதாரம் மீதும் தாக்குதல்; உலக வங்கியை அணுக இந்தியா முடிவு

4

புதுடில்லி: பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கியிடம் எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதேபோல், எப்ஏடிஎப்., அமைப்பிடம் பேசவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.


சர்வதேச அளவில் பயங்கரவாதிகளுக்கு பண உதவி கிடைப்பதை தடுப்பது, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுப்பது ஆகிய நோக்கங்களுடன் குரூப் 7 (ஜி 7) நாடுகளால் பைனான்சியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் என்ற fatf சர்வதேச அமைப்பு தொடங்கப்பட்டது.

இதில் 38 உறுப்பினர் நாடுகளும், ஐரோப்பிய யூனியன் உட்பட இரு சர்வதேச அமைப்புகளும் உறுப்பினர்களாக உள்ளன.


பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளை இந்த அமைப்பு, வகைப்படுத்தி கண்காணிப்பு பட்டியலில் வைக்கிறது.இவ்வாறு கண்காணிப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு சர்வதேச அமைப்புகளில் இருந்து நிதி உதவி எதுவும் கிடைக்காது.


சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானும் இந்த பட்டியலில் இடம்பெற்று இருந்தது.

பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அந்த பட்டியலில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த நாடு தப்பி வெளியே வந்தது.


ஆனாலும் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தற்போதைய காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருப்பதை உலக நாடுகள் மத்தியில் விளக்கி, மீண்டும் பைனான்சியல் ஆக்சன் டாஸ் போர்ஸ் அமைப்பின் கிரே பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. )


பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனவரியில் ஒப்புக் கொண்டபடி, 20 பில்லியன் டாலர் நிதியை வழங்க வேண்டும் என உலக வங்கியிடம் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிதி உதவியை பாகிஸ்தானுக்கு வழங்கக் கூடாது என்றும் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் விரைவில் உலக வங்கி நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளனர்.

Advertisement