வங்கக்கடலில் வரும் 27ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு

சென்னை: 'மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், வரும், 27ம் தேதி காற்றழுத்த தழ்வு பகுதி உருவாகக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
மத்திய கிழக்கு அரபிக்கடலில், கோவா, தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால், நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.
இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த, 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், வரும் 27ம் தேதி, புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 28 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில், ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒரு சில இடங்களில், இன்று முதல், 26 வரையிலான காலத்தில், அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக துாத்துக்குடியில், 101 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கோவை, நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு
-
ராட்சத குழாய் உடைப்பால் 20 அடி உயரம் பீய்ச்சி அடித்த குடிநீர்; போக்குவரத்து முடக்கம்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்., பொருளாதாரம் மீதும் தாக்குதல்; உலக வங்கியை அணுக இந்தியா முடிவு
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா; தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பு
-
மஹா.,- சத்தீஸ்கர் எல்லையில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக் கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
மாரடைப்பில் சரிந்த பஸ் ஓட்டுநர்; சமயோசிதமாக செயல்பட்டு 50 பயணிகளை காப்பாற்றிய கண்டக்டர்