தொழிலாளியை தாக்கிய மூவர் கைது

அன்னுார்: அன்னூர் அருகே தொழிலாளியை தாக்கிய கம்ப்யூட்டர் இன்ஜினியர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்லப்பம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் சந்தோஷ் குமார், 31. சென்ட்ரிங் தொழிலாளி. கடந்த 20ம் தேதி இரவு கரட்டுமேடு பகுதியில், சந்தோஷ்குமாரை, ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கவியரசன், 31. கோழிக்கடை உரிமையாளர் ஆதித்யன், 21. நவீன் குமார், 23. ஆகிய மூவரும் மது போதையில் கற்களால் தாக்கினர்.

காயமடைந்த சந்தோஷ்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதை அடுத்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்கிய மூவரையும் கைது செய்து அன்னூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

Advertisement