பிரம்மோற்சவ விழா துவங்கியது திருநள்ளாறில் 6ம் தேதி தேரோட்டம்

காரைக்கால் : காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

காரைக்கால் திருநள்ளாறு பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார்.

நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.

கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடக்கும். இதற்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து விநாயகர் உற்சவம் சுப்ரமணிய உற்சவம் அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

வரும் 6ம் தேதி ஐந்து தேரோட்டம் நடக்கிறது. 7ம் தேதி தங்க காக வாகனம் வீதியுலா, 8ம் தேதி தெப்பல் திருவிழா நடக்கிறது. இதனையொட்டி தேரோட்டத்திற்கு தேர் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement