மாயமான வழிகாட்டி பலகை சுற்றுலா பயணியர் அதிருப்தி

வால்பாறை : வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரொட்டிக்கடை மூன்று ரோடுகள் சந்திப்பு பகுதியில், பெரிய அளவிலான வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது. இதனால், வால்பாறை வருவோர் எளிதில் வழித்தடம் அறிந்து செல்ல முடிந்தது.

இந்நிலையில், ரொட்டிக்கடை, பழைய வால்பாறை, மாதா கோவில் சந்திப்பு உள்ளிட்ட மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் இருந்த வழிகாட்டி பலகை அப்புறப்படுத்தப்பட்டு, சிறிய அளவிலான வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வால்பாறைக்கு புதியதாக வருவோர் வழித்தடம் தெரியாமல் தவிக்கின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

ஆயிரக்கணக்கான வாகனங்கள் வால்பாறைக்கு வந்து செல்லும் நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட வழிகாட்டி பலகை மாயமானதால், சுற்றுலா பயணியர் செல்லும் வழி தெரியாமல் தவிக்கின்றனர். எனவே, சுற்றுலா பயணியர் நலன் கருதி வால்பாறையில் முக்கிய ரோடுகள் சந்திக்கும் இடங்களில், பெரிய அளவிலான வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement