இலவச மருத்துவ முகாம்

திருக்கனுார் : புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

மண்ணாடிப்பட்டு தொகுதி தேத்தாம்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன் முன்னிலை வகித்தார்.

முகாமில், பிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் பங்கேற்று, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தை மருத்துவம், மகப்பேறு, எலும்பு முறிவு, தோல் மற்றும் பல் சம்மந்தமான சிகிச்சைகள் அளித்தனர். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு, இ.சி.ஜி.,பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை ராஜசெல்வம், ராமகிருஷ்ணன், பாபுராஜ், பெருமாள், தனசேகர், முத்துகிருஷ்ணன், சுரேஷ், ரகு, சாரதி, கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement