108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கத்தினர் திட்ட இயக்குநரை சந்தித்து கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரி 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கத்தினர் நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளத்தை உடனே வழங்கோரி சுகாதார இயக்க திட்ட இயக்குநரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

புதுச்சேரி 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கத்தினர் சுகாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநர் கோவிந்தராஜனை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதில், நிலுவையில் உள்ள மூன்று மாதம் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

என்.ஆர்.எச்.எம் ஊழியர்களுக்கு வழங்குவது போது, தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் முடித்த ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, திட்ட இயக்குநர் கோவிந்தராஜன் கூறுகையில், மூன்று மாத சம்பளத்தை வழங்குவதற்கான கோப்புகள் தயார் செய்து அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பணி நிரந்தரம் குறித்து முதல்வரிடம் பேசி ஆவண செய்வதாகவும், தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் தெரிவித்தார். இதில், தொழிற்சங்க தலைவர் புருஷோத்தமன், செயலாளர் பிரபாகரன், பாபு, அய்யனார், பெரியசாமி, லுார்து, வெங்கடேசன், முனுசாமி மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

Advertisement