பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் சீரமைப்பு பணிகள்

கூடலுார் : கூடலுார் தேவர்சோலை பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி உள்ளனர்.

கூடலுார் தேவர்சோலையில், 3 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகத்துடன் அமைக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. சாலையை விட, பஸ் ஸ்டாண்ட் சற்று உயரமாக இருந்ததால், அதனுள் பஸ்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டது.

இதனால், பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்கள் எளிதாக சென்று வர வசதியாக, நுழைவு வாயில் சீரமைக்க முடிவு செய்து இடிக்கப்பட்டது. இரண்டு மாதங்களாக பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது.

பஸ்கள், சாலையில் நின்று பயணிகளை ஏற்றி சென்றன. பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் பொருள்கள் இறக்கவும், மக்கள் பொருள்களை வாங்கி செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

அதிருப்தி அடைந்த மக்கள், பருவமழைக்கும் முன், சீரமைப்பு பணிகளை துவங்கி முடிக்க வலியுறுத்தினர். இந்நிலையில், சீரமைப்பு பணியை துவங்கி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் சென்று வர சிரமம் ஏற்பட்டதால், அதனை சீரமைப்பதற்காக நுழைவு வாயில் உடைக்கப்பட்டு, பணிகள்

கிடப்பில் போடப்பட்டது. பஸ் சாலையில் நின்று பயணிகளை ஏற்றி செல் கிறது. பஸ் ஸ்டாண்ட் உள்ளே உள்ள ரேஷன் கடைக்கு பொருள்களை இறக்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பருவ மழையின் போது மேலும் சிரமங்களை சந்திக்கும் சூழல் உள்ளது. எனவே, தற்போது துவங்கியள்ள சீரமைப்பு பணிகளை, மீண்டும் கிடப்பில் போடாமல் விரைந்து முடிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement