மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் கனிமொழி விமானம் தப்பியது
மாஸ்கோ : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் குறித்தும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பது குறித்தும் விளக்குவதற்காக, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 33 நாடுகளுக்கு, இந்திய எம்.பி.,க்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் சென்றுள்ளன.
தி.மு.க., - -எம்.பி., கனிமொழி தலைமையில், பா.ஜ., ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி., கட்சிகளின் எம்.பி.,க்கள் அடங்கிய குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக போர் நீடிக்கும் சூழலில், இரு நாடுகளும் ட்ரோன்கள், ஏவுகணை தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கனிமொழி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு சென்ற விமானம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை அடைவதற்கு சிறிது நேரத்துக்கு முன், ரஷ்யாவை நோக்கி 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் ஏவியது.
இதுவரை, ரஷ்யாவின் பிற பகுதிகளில் மட்டுமே ட்ரோன் தாக்குதல் நடத்தி வந்த உக்ரைன், நேற்று முன்தினம் இரவு மாஸ்கோ நோக்கியும் ட்ரோன்களை ஏவியது.
மொத்தம் 112 ட்ரோன்கள் ஏவப்பட்டதில், 24 ட்ரோன்கள் மாஸ்கோவை குறிவைத்தன. அவற்றை, ரஷ்ய படையினர் தடுத்து நிறுத்தி அழித்தனர். எனினும், ட்ரோன் தாக்குதலால், விமான நிலையங்கள் மூடப்பட்டன; சில விமானங்கள் வேறு விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால், 153 விமானங்களின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, கனிமொழி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு சென்ற விமானமும் மாஸ்கோவில் தரை இறங்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
இதனால், கனிமொழி சென்ற விமானம் வானத்திலேயே வட்டமிட்டது; 45 நிமிடங்கள் தாமதத்துக்கு பின், மாஸ்கோ விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.
உக்ரைன் ட்ரோன் தாக்குதலால், ரஷ்யாவில் 150க்கும் அதிகமான விமானங்களின் சேவையில்
பாதிப்பு ஏற்பட்டது. அது தொடர்பாக, ரஷ்ய தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், மாஸ்கோவின் தெற்கு பகுதியில் உள்ள லிபெட்ஸ்க் என்ற இடத்தில் எட்டு பேர் காயமடைந்ததாக, அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. இதேபோல கிரீமியாவில், உக்ரைன் ஏவிய 22 ட்ரோன்களால் பலர் காயமடைந்தனர்.
மேலும்
-
சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்
-
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
சர்வதேச சமூகத்துக்கு அவமானம்; ஐ.நா.,வில் பாகிஸ்தானை சாடிய இந்தியா!
-
மனநலம் பாதித்த இளைஞர் அடித்து கொலை?
-
கஞ்சா கடத்திய 3 பேர் கைது
-
மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது