கோட்டா தற்கொலைகள் நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி: மேற்கு வங்கத்தின் கரக்பூரில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்து வந்த 22 வயது மாணவர் கடந்த 4ம் தேதி விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜஸ்தானின் கோட்டா என்ற இடத்தில், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி பெற்று வந்த மாணவி சமீபத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரு வழக்குகளிலும் போலீசார் முறையான விசாரணை நடத்தாதது குறித்து, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

அப்போது, 'ராஜஸ்தானின் கோட்டாவில் இந்த ஆண்டு மட்டும், 14 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். அங்கு மட்டும் ஏன் இத்தனை தற்கொலைகள்; இதற்கு மாநில அரசின் நடவடிக்கை என்ன?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கோட்டா மாணவி தற்கொலை வழக்கில் இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது குறித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

Advertisement