பென்னிக்கல்லில் வயல் விழா



சூளகிரி,கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வேளாண்மைத்துறையின் அட்மா திட்டம் சார்பில், பென்னிக்கல் கிராமத்தில் வயல் விழா நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் ரஞ்சிதா, துணை வேளாண்மை அலுவலர் பழனி, அதியமான் வேளாண்மை கல்லுாரி முதல்வர் ஸ்ரீதரன்,


உதவி தோட்டக்கலை அலுவலர் புத்தன், உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்ச்செல்வி, பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் கல்யாண சுந்தரம் ஆகியோர், விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை, தென்னையில் கருந்தலை புழுவை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. மேலும், இடு பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement