ஆறு பேரை பலி வாங்கிய குவாரி விபத்து 3 பேர் கைது: உரிமையாளர் தலைமறைவு

சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் கிரஷர் குவாரியில் பாறை சரிந்து ஆறு பேர் பலியான விபத்தில் குவாரி உரிமையாளர் மேகவர்ணன் 48, தலைமறைவானார். அவரது தம்பி கமலதாசன் 45, உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் கிரஷர் குவாரியில் மே 21 வெடிவைக்க துளையிட்ட போது பாறை சரிந்து 6 தொழிலாளர்கள் பலியாயினர். பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் குவாரி நடத்தப்பட்ட நிலையில் அதற்கான லைசென்சை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் வி.ஏ.ஓ., பாலமுருகன் அளித்த புகாரின்படி கவனக்குறைவாக பணியில் ஈடுபடுதல், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் செய்து கொடுக்காமல் இருத்தல் ஆகிய பிரிவுகளில் குவாரி உரிமையாளர் மேகவர்ணன் உள்ளிட்டோர் மீது எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விபத்து நடந்ததும் மேகவர்ணன் தலைமறைவானார். அவரின் தம்பி கமலதாசன், மதுரை மாவட்டம் இ.மலம்பட்டியைச்சேர்ந்த பணியிட பொறுப்பாளர் கலையரசன் 32, கீழவளவைச் சேர்ந்த சூப்பர்வைசர் ராஜ்குமார் 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேகவர்ணனை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் மேகா புளூ மெட்டல் கிரஷர் உள்ளே கல் குவாரி செயல்பட முறையான அனுமதி உள்ளதா, சம்பவம் நடந்த சர்வே எண்ணில் தான் குவாரி செயல்பட உரிமம் உள்ளதா, அப்படி இருந்தால் யார் பெயரில் அனுமதி பெறப்பட்டது, மேகவர்ணனின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஏதேனும் அனுமதி இருந்து காலாவதி ஆகியிருக்கிறதா, சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் எவ்வளவு என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
மேலும்
-
சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்
-
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
சர்வதேச சமூகத்துக்கு அவமானம்; ஐ.நா.,வில் பாகிஸ்தானை சாடிய இந்தியா!
-
மனநலம் பாதித்த இளைஞர் அடித்து கொலை?
-
கஞ்சா கடத்திய 3 பேர் கைது
-
மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது