தி.நகரில் நகை திருடிய பெண் கைது

சென்னை, கூடுவாஞ்சேரி, வல்லஞ்சேரியைச் சேர்ந்தவர் நந்தினி, 41. இவர், கடந்த மாதம் 30ம் தேதி, உறவினர் சரோஜாவுடன், தி.நகர் நகைக்கடைக்கு வந்தார்.

அங்கு, 46.50 கிராம் தங்க நகைகள் வாங்கி பையில் வைத்து, ரங்கநாதன் தெருவில் நடந்து சென்றார். கூட்ட நெரிசலில்,பையில் இருந்த நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

மாம்பலம் போலீசார் விசாரித்து, திருவொற்றியூர், வன்னியர் தெருவைச் சேர்ந்த ரேகா, 30, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர், கொட்டிவாக்கத்தை சேர்ந்த சசிகலா, 50, என்பவரிடம், 2 கிராம் தங்க கம்மல், 144 கிராமிலான இரு ஜோடி வெள்ளி கொலுசுகளை திருடியது தெரியவந்தது.

Advertisement